அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 2 முதியவர்கள் சிகிச்சை பலனின்றி பலியானதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகின்றது. 90க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா குடியேறிருக்கிறது. இதுவரை கொரோனவால் 3200க்கும் மேற்பட்டோர் பலியானதுடன், 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவின் பிடியில் வல்லரசு நாடான அமெரிக்காவும் சிக்கியுள்ளது. இந்நிலையில் சீனாவுக்கு சென்று புளோரிடா திரும்பிய 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, கடல்தாண்டி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த 70 வயது மதிக்கத்தக்க 2 முதியவர்கள், கொரோனா தொற்றால் இறந்து விட்டதாக புளோரிடா சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மேலும் பலியானவர்களில் ஒருவர், சாண்டா ரோசா கவுண்டியையும் (Santa Rosa County), மற்றொருவர் ஃபோர்ட் மியர்ஸை (Fort Myers) சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளது.