Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரே மாதத்தில் ரிலீஸாகும் ஆர்யாவின் இரண்டு படங்கள்… ரசிகர்கள் உற்சாகம்..!!

ஆர்யா நடித்துள்ள இரண்டு படங்கள் ஒரே மாதத்தில் ரிலீஸ்-ஆக உள்ளதால் ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

பிரபல பட இயக்குனரான ஆனந்த் சங்கர் இருமுகன், அரிமா நம்பி ஆகிய படங்களுக்கு பிறகு “எனிமி” என்ற படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தில் ஆர்யா வில்லனாகவும், விஷால் ஹீரோவாகவும் நடித்துள்ளனர். அவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களாக மிருணாளினி, மம்தா மோகன்தாஸ், கருணாகரன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் அந்தப் படத்தினுடைய படப்பிடிப்பு முடிந்து தற்போது விறுவிறுப்பான பின்னணி பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையே அந்த படக்குழு வருகின்ற செப்டம்பர் மாதம் ‘எனிமி’ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இன்னும் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அதே மாதத்தில் சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள “அரண்மனை 3” படமும் வெளியாக உள்ளது. எனவே ஆர்யாவுடைய இரண்டு படங்கள் ஒரே மாதத்தில் ரிலீஸ் ஆக உள்ளதால் ரசிகர்கள் ஆர்வம் அதிகரித்துள்ளது. மேலும் திரையரங்குகளில் இந்த இரண்டு படங்களும் வெளியிடப்படுகிறது.

Categories

Tech |