Categories
டெக்னாலஜி

இரு மடங்கு லாபம் தரும்… அரசின் டெபாசிட் திட்டம்… இதில் பணம் போட்டால் ரொம்ப நல்லது…!!!

மாதம் 1,000 ரூபாய் செலுத்தினால் இரு மடங்கு லாபம் தரும் அரசின் அருமையான திட்டத்தை பற்றி இதில் பார்ப்போம்.

இன்றைய காலத்தில் மக்கள் பரபரப்பான வாழ்க்கையை எப்போதும் வாழ்ந்து வருகின்றனர். இதன் காரணமாக தங்களது உடல்களை பற்றிய ஒரு சிறிதும் கவலை இல்லாமல் இருந்து வருகின்றனர். தொழில், பணி ஆகியவை நிரந்தரம் அற்றதாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் நோய்த்தொற்றின் காரணமாக மக்கள் மருத்துவமனைக்கு கூட்டம் கூட்டமாக சிகிச்சைக்கு சென்று வருகின்றனர். இதுபோன்ற சூழலில் நமக்கு கைகொடுப்பது சேமிப்பு பணம். அந்த வகையில் அதிக லாபம் தரும் மத்திய அரசின் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் ஒன்று அஞ்சலக டைம் டெபாசிட் திட்டம்.

அஞ்சலகங்களில் 1,2,3, 5 வருடம் வரை டெபாசிட் உண்டு. இதில்  6.7 சதவீதம் வரை வட்டி கிடைக்கின்றது . இது மிகவும் பாதுகாப்பான முதலீட்டு திட்டம்.  5 வருட டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும்போது 80-சி வரி விலக்கு உண்டு. இதில் குறைந்தபட்சம் டெபாசிட் ஆயிரம் ரூபாய் . இந்த திட்டத்தில் 5 ஆண்டு வைப்பு தொகை திட்டத்தில்  கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் மற்றும் 9 மாதங்களில் உங்களது முதலீடு இரட்டிப்பாகும் . அடையாளம் தெரியாத நிறுவனங்களுக்கு சென்று அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை இழப்பதை விட அரசு அஞ்சலகங்களில் சேமிப்பது மிகவும் பாதுகாப்பான ஒன்று.

Categories

Tech |