கோழி ஒன்று 10 வயது சிறுமி ஆசையாய் வளர்த்த செடியை சேதப்படுத்தியதால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள அயனாவரம் வசந்தா கார்டன் பகுதியில் வெள்ளையம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் மரியா என்ற பேத்தி உள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் ஆசையாக மரியா ஒரு செடியை வளர்த்து வந்துள்ளார். இதனையடுத்து இவர்களது பக்கத்து வீட்டில் வசிக்கும் பாஷா என்பவரது கோழி மரியா ஆசையாக வளர்த்த செடியை கொத்தி சேதப்படுத்தி உள்ளது.
இதனால் இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறி விட்டது. இந்நிலையில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கத்தி மற்றும் கற்களால் தாக்கியதால் 7 பேர் படுகாயம் அடைந்தனர். அதன்பின் அருகில் உள்ளவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த அயனாவரம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.