Categories
உலக செய்திகள்

செல்பி எடுக்க போனை தூக்கினால் போதும்….. போஸ் கொடுக்க ஓடி வரும் கொரில்லாக்கள்..!!

காங்கோவில் வனத்துறை ஊழியர் ஒருவர்  செல்ஃபி எடுக்கும் போது  போட்டோக்களுக்கு இரண்டு கொரில்லாக்கள்  போஸ் கொடுப்பது ஆச்சரியத்தையும் அதிசயத்தையும்  ஏற்படுத்தி உள்ளது.

இன்றைய உலகில் செல்போனில் செல்பி எடுக்காத மனிதர்களே இல்லை என்றே கூறலாம். ஒவ்வொருவரும் வித விதமான போஸ் கொடுத்து செல்பி எடுத்து மகிழ்கின்றனர். இந்நிலையில் காங்கோவில் உள்ள விருங்கா தேசியப் பூங்காவில் (Virunga National Park) இரண்டு கொரில்லா வகைக் குரங்குகள் பாதுகாத்து  வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த இரண்டு கொரில்லாக்களுடன்  அங்கு பணியாற்றும் வனத்துறை ஊழியர் பேட்ரிக் சாடிக் என்பவர் அடிக்கடி  சேர்ந்து செல்ஃபி எடுத்து மகிழ்ந்து வந்துள்ளார்.

Image result for Two gorillas pose for selfies with anti-poaching officers

அவர் அவ்வப்போது செல்பி எடுத்து வருவதால்  நாளடைவில் அவர் செல்போனை தூக்கினாலே அங்கிருக்கும்  நடாகாஷி மற்றும் மடாபிஷி (Ndakasi and Matabishi) என்ற இரு கொரில்லாக்கள் வேகமாக வந்து போட்டோக்களுக்கு ஸ்டைலாக போஸ் கொடுக்கின்றன. இரண்டு கொரில்லா குரங்குகளும் இப்படி போட்டோவுக்கு  போஸ் கொடுக்கும்   இந்தச் செயல் பார்ப்பவர்களை ஆச்சரியத்திலும் அதிசயத்திலும்  ஆழ்த்தியுள்ளன.

Categories

Tech |