தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் தனுஷ் மற்றும் சந்தானத்தின் திரைப்படம் ஒரே நாளில் ரிலீஸ் செய்யப்படுவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரையரங்குகளில் மாஸ்டர் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து முன்னணி நடிகர்களின் படங்கள் வரிசையாக ரிலீஸுக்கு காத்துக்கொண்டிருக்கின்றன. அதன்படி காதலர் தினத்தையொட்டி வருகிற பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி, தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் ரிலீஸ் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாயின.
இந்நிலையில் அந்த படத்திற்கு போட்டியாக அதே நாளில் எ1 படத்தை இயக்கிய ஜான்சன் கே இயக்கத்தில், சந்தானம் நடித்துள்ள பாரிஸ் ஜெயராஜ் என்ற படமும் திரையரங்குகளில் வெளியிடப்போவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் சந்தானம் தாத்தாவாக நடித்துள்ளதால் முழுக்க முழுக்க காமெடி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸாக போவதால் இது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.