மோட்டார் சைக்கிளில் விபத்து ஏற்பட்டு இருவர் மரணம்.
ஆவடியில் உள்ள செங்குன்றத்தை சேர்ந்தவர்கள் பிரதீப், சிவா மற்றும் மணிகண்டன். நண்பர்களான மூவரும் நேற்று இரவு செங்குன்றத்தில் இருந்து ஆவடியை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். பாலவேடு மேம்பாலத்தின் மீது மோட்டார் சைக்கிள் வந்துகொண்டிருந்த பொழுது எதிர்பாராதவிதமாக சாலையின் இடது புறம் இருந்த தடுப்புச்சுவரில் இருந்த மின்கம்பம் மீது மோட்டார் சைக்கிள் மோதி 20 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டனர். இதனால் பிரதீப் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். மணிகண்டன் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.