Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

டோல் கேட்டை தகர்த்தெறிந்த லாரி… இருவர் பலியான சோகம்… வைரலாகும் சிசிடிவி காட்சி.!!

கிருஷ்ணகிரியில் தறிக்கெட்டு ஓடிய லாரி சுங்கச் சாவடி வசூல் மையத்தின் மீது மோதியதில் இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள நகர நெடுஞ்சாலை பகுதியையொட்டி சுங்கச் சாவடி ஒன்று அமைந்துள்ளது. இதில் இன்று மதியம் வழக்கம் போல் சுங்கச்சாவடி ஊழியர்கள் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாரத விதமாக அதிவேகத்தில் வந்த லாரி கட்டுபாட்டை இழந்து சுங்கசாவடி வசூல் மையம், அங்கு வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இந்த விபத்து ஏற்படுவதற்கு சில நொடிகளுக்கு முன்னர்தான், குழந்தையுடன் நான்குபேர் சென்ற இருசக்கர வாகனம் அப்பகுதியை கடந்தது. ஆனால் அவர்கள் இவ்விபத்தில் சிக்காமல் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி  வைரலாகியுள்ளது.

https://twitter.com/pmkkrish4/status/1201108122447671296

Categories

Tech |