Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சை அருகே வெட்டு குத்து….. 2 பேர் மரணம்….. 4 பேர் கைது….!!

தஞ்சையில் இருதரப்புக்கிடையே நடந்த மோதலில் 2 பேர் மரணம் அடைய ஒருவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தஞ்சாவூர் மாவட்டம் வடக்கு வாசல் பகுதியை அடுத்த இரட்டை பிள்ளையார் கோவிலை சேர்ந்தவர் செபஸ்டின். இவரும் இவரது நண்பருமான சதீஷ்குமார் ஆகியோர் வடக்குவாசல் சிரேஸ்சத்திரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை எதிரே நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த 4 பேர் இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்ற தகராறாக  மாறியது. இதையடுத்து ஆத்திரமடைந்த நான்கு பேரும் செபஸ்டின் சதீஷ்குமார் மற்றும் இருதரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்ற மூன்றாவது நபரான சக்திவேல் ஆகியோரை சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த மூவரும் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அதில் செபஸ்டின் மற்றும் சக்திவேல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழக்க, சதீஷ்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின் இதுகுறித்து தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட, புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணைமேற்கொள்கையில்,  முன்விரோதம் காரணமாக நடைபெற்ற கொலை என்பது தெரியவந்தது. அதன்படி,

சுந்தரமூர்த்தி, சூரியா, செல்வகுமார், வெங்கடேஸ்வரன் ஆகியோரை கைது செய்து தஞ்சாவூர் நடுவர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் நேற்று இரவு ஆஜர்படுத்தினர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி வருகின்ற 31ம் தேதி வரை நீதிமன்ற காவலில் 4 பேரையும் வைக்க உத்தரவிட்டார். உத்தரவின் பேரில் 4 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Categories

Tech |