நட்சத்திர ஹோட்டலில் ரகளை செய்த இரண்டு பெண்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள தேனாம்பேட்டை பகுதியில் சௌமியா என்பவர் வசித்துவருகிறார். இவர் அப்பகுதியில் அழகு நிலையம் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கத்திபாராவில் இருக்கும் பிரபல நட்சத்திர ஹோட்டலில் சௌமியா மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அருகில் மது குடித்து கொண்டிருந்த மீரா என்ற பெண் செல்போனில் சத்தமாக பேசியுள்ளார். அதற்கு “நாம் நட்சத்திர ஹோட்டலில் மது குடித்துக் கொண்டிருக்கிறோம்; கொஞ்சம் மெதுவாக பேசுங்கள்” என சௌமியா அவரிடம் கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த மீரா சவுமியாவை தகாத வார்த்தைகளால் திட்டியதால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து நட்சத்திர ஹோட்டல் ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் போதையில் ரகளை செய்த இரண்டு பெண்களையும் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.