இங்கிலாந்து நாட்டில் தற்போது பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. வல்லரசு நாடுகளில் ஒன்றாக கருதப்படும் இங்கிலாந்தில் கொரோனா காலத்தில் இருந்தே பொருளாதார நெருக்கடி தொடர்கிறது. இதனால் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளில் பிரதமர் லிஸ் டிரஸ் ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் ஒரு லட்சம் அரசு ஊழியர்களை பணியில் இருந்து நீக்கம் செய்வதற்கு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதோடு தொடர்ந்து பண வீக்கம் அதிகரிக்குமானால் அடுத்த வருடமும் ஒரு லட்சம் பணியாளர்களை நீக்குவதற்கு பிரதமர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதேபோன்று அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட மாட்டாது என்று கூறப்பட்டுள்ளது. அரசின் செலவுகளை குறைத்து 5 பில்லியன் பவுண்டுகளை சேமிப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடிய விரைவில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கூட இருக்கும் நிலையில், அரசு ஊழியர்களை பிரதமர் பணிநீக்கம் செய்ய முடிவு செய்திருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.