கனடாவை சேர்ந்த பெண்ணொருவருக்கு அவர் வாங்கிய இரண்டு லாட்டரி சீட்டில் ஒன்றுக்கு ஒரு லட்சம் டாலர் பரிசுத்தொகையாக விழுந்துள்ளது.
கனடாவின் சேர்ந்த 86 வயது எலிசபெத் என்பவர் LOTTO MAX மற்றும் LOTTO 6/49 என இரண்டு லாட்டரி சீட்டுகளை வாங்கினார். தான் வாங்கிய லாட்டரி சீட்டுகளுக்கு பரிசுகள் உள்ளதா என்பதை பார்ப்பதற்காக கடைக்கு சென்று பார்த்துள்ளார் எலிசபெத். LOTTO MAX லாட்டரி சீட்டுக்கு பரிசு விழவில்லை என்பதை தெரிந்துகொண்டு கோபத்தில் அதனை கிழித்துப் போட்டார். ஆனால் அடுத்ததாக LOTTO 6/49 லாட்டரி சீட்டை பரிசோதித்தபோது அவருக்கு ஒரு லட்சம் டாலர் பரிசு விழுந்தால் தெரியவந்துள்ளது.
பின்னர் எலிசபெத் பரிசு விழுந்த லாட்டரி சீட்டை கிழித்து விட்டோமா என்றும் குழப்பமடைந்துள்ளார். ஆனால் அவரது பையில் LOTTO 6/49 பத்திரமாக இருந்தது. இதனைத்தொடர்ந்து மகிழ்ச்சி அடைந்த எலிசபெத் தனது பரிசு பணத்தை பெற்றுச் சென்றார். இதுகுறித்து அவர் கூறியபோது, “வரி இல்லாத சேமிப்பு கணக்கு ஒன்றை தொடங்க போகிறேன். இந்த பணத்தில் ஒரு பகுதியை என் குடும்பத்தினருக்கு கொடுப்பேன்” என தெரிவித்துள்ளார்.