மது பாட்டில்களை கடத்தி சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மதுபான கடைகள் உட்பட அனைத்து கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ஜூஜூவாடி சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அவ்வழியாக வந்த ஒரு காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
அப்போது அதில் கர்நாடக மதுபாட்டில்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து மதுபாட்டில்கள் கடத்தி வந்த குற்றத்துக்காக காவல்துறையினர் பால்ராஜ், ராஜீவ் காந்தி ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 672 மதுபாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.