Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சரக்கு வேன்-லாரி மோதல்… கோர விபத்தில் பறிபோன உயிர்கள்… திருச்சியில் பரபரப்பு…!!

சரக்கு வேன்-லாரி ஒன்றுக்கொன்று மோதிய விபத்தில் 2 பேர் பலியான நிலையில் 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டத்திலுள்ள தொட்டியம் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரி அருகே சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த சரக்கு வேனை சந்திரசேகர் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் இந்த சரக்கு வேனும், அவ்வழியே எதிராக வந்த லாரியும் ஒன்றுக்கொன்று மோதி விபத்தில் சரக்கு வேன் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் அந்த சரக்கு வேனில் பயணித்த முசிறியை சேர்ந்த கந்தசாமியின் மனைவி வேணி, டிரைவர் தனசேகர் போன்றோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த ஜெயந்தி, ஹரிணி, பழனியம்மாள், இந்துமதி, ஜெயமணி போன்ற ஐந்து பேரை மீட்டு தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதனையடுத்து இறந்தவர்களின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தொட்டியம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |