Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உறவினருடன் சென்ற சிறுவன்… பறிபோன இரு உயிர்கள்… விருதுநகரில் நடந்த சோகம்…!!

கண்மாயில் நீச்சல் பழகி கொண்டிருக்கும் போது சிறுவனும், கட்டிடத் தொழிலாளியும்  தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செனல்குடி பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் மோகன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் இந்த சிறுவன் தனது உறவினரான கடம்பங்குளம் பகுதியில் வசிக்கும் கட்டிட தொழிலாளி மூர்த்தி என்பவருடன் கடம்பன்குளம் கண்மாயில் நீச்சல் பழக சென்றுள்ளார். இந்நிலையில் சுந்தரமூர்த்தி சிறுவன் மோகனுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அவர்கள் ஆழமான பகுதிக்கு சென்றதால் இரண்டு பேரும் தண்ணீரில் மூழ்கி விட்டனர்.

இதனை அறிந்ததும் கண்மாயில் இறங்கி சுந்தரமூர்த்தி மற்றும் மோகனின் உடலை கிராம மக்கள் தண்ணீரில் இருந்து மீட்டனர். இதுகுறித்து தகவலறிந்த சூலக்கரை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடல்களையும் கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவமனை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |