Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இவங்க மேலதான் சந்தேகமா இருக்கு… வசமாக சிக்கியவர்கள்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள கொட்டைபட்டி பகுதியில் மணப்பாறை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை காவல் துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அந்த 2 பேரும் அதே பகுதியில் வசிக்கும் குமார் மற்றும் லோகநாதன் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும் அவர்கள் அங்கு சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து லோகநாதன் மற்றும் குமார் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 25 மது பாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை  பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |