Categories
சினிமா தமிழ் சினிமா

சர்வைவர் ஷோவில் புதிதாக இணையும் இரண்டு பிரபலங்கள்… யார் யார் தெரியுமா?

ஜீ தமிழில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகிவரும் சர்வைவர் நிகழ்ச்சியில் புதிதாக இரண்டு பேர் இணைய இருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல தொலைக்காட்சி சேனலான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் எனும் ரியாலிட்டி ஷோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 2 பேர் வெளியேற்றப் பட்டுள்ளனர். இதை தொடர்ந்து ஒவ்வொரு போட்டியாளர்களும் கடுமையாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில் பிரமாண்டமாக ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சியில் புதிதாக இரண்டு பேர் இணைய இருக்கிறார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இனிகோ பிரபாகரன் மற்றும் Vanessa Cruez ஆகியோர் சர்வைவர் நிகழ்ச்சியில் நுழைய இருக்கின்றனர்.

Categories

Tech |