புதிய படங்களை வெளியிட வேண்டாம் என்று இயக்குனர் பாரதி ராஜா ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார்.
இயக்குனரும், நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான பாரதிராஜா ஒரு மாதத்திற்கு முன்பாக ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். குறிப்பாக க்யூப் சினிமாவுக்கு வசூலிக்க கூடிய விபிஎஃப் கட்டணம் கட்டணத்தை நீக்க வேண்டும். அப்படி நீக்கினால் மட்டுமே நாங்கள் படத்தை வெளியிடுவோம் என்று பாரதி ராஜா கூறியிருந்தார். ஆனால் அந்த சமயத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது. இதனால் பேச்சுவார்த்தையோ, ஆலோசனையோ நடைபெறாமல் இருந்தது. இதையடுத்து தற்போதும் அதே கருத்தை பாரதிராஜா தெரிவித்து இருக்கின்றார்.
VPF கட்டணத்தை நீக்கினால் மட்டுமே நாங்கள் திரைப்படங்களை வெளியிடுவோம் என்று கூறியிருக்கிறார். இந்த கட்டணத்தால் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படம் வெளியாகும்போது அதிகபட்சமாக 2கோடி வரை தயாரிப்பாளர்களுக்கு கூடுதலாக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த கட்டணத்தை நாங்கள் செலுத்த மாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் கூறியிருந்தனர். இதனால் தயாரிப்பாளர்களுக்கு நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா இந்த அறிக்கை கொடுத்திருக்கிறார்.
தற்போது தமிழக அரசு திரையரங்கை திறக்க அனுமதி அளித்திருக்கிறது. 10 ஆம் தேதியிலிருந்து திரையரங்குகள் திறந்து கொள்ளலாம் என்று கூறி இருக்கின்ற நிலையில் புதிய படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இதே நேரத்தில் திரையரங்க உரிமையாளர்கள் நாளை ஒரு ஆலோசனை நடத்துகின்றனர். காணொலிக் காட்சி மூலமாக நடைபெறும் இந்த ஆலோசனையில் இது குறித்து இறுதி முடிவு எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.