Categories
தேசிய செய்திகள்

உங்கள் வீட்டில் இரண்டு பெண் குழந்தை இருக்கா…? ” 50000 அரசு உதவி தொகை”… எப்படி பெறுவது..?

உங்கள் வீட்டில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் உங்களுக்கு 50000 உதவி தொகை கிடைக்கும்.

முன்னொரு காலத்தில் பெண்கள் அதிகமாக பிறந்தால் அவர்களுக்கு தேவைகள் அதிகம் என்று கூறி கொலை செய்து வந்தனர். பிறகு அரசின் பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக பெண் குழந்தைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. பெண் குழந்தை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் தலா 25 ஆயிரம் என ஐம்பதாயிரம் அரசு வழங்குகிறது.

எப்படி விண்ணப்பிக்கலாம்:

சமூக நலத்துறை மூலம் செயல்பட்டுவரும் தமிழக அரசின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இரண்டு பெண் குழந்தைகளுக்கு 25 ஆயிரம் வீதம் மொத்தம் 50 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. தேவைப்படும் ஆவணங்கள் ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை மட்டும் உள்ள நிலையில் மற்றொரு குழந்தை பிறந்து மூன்று வயதுக்குள் இந்த திட்டத்திற்கு பதிவு செய்ய வேண்டும். முதல் பெண் குழந்தை பிறந்த நிலையில் இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்தால் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

பெண் குழந்தையின் தாய்க்கு 35 வயதுக்கு மேல் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து இருக்க வேண்டும். அதற்கான மருத்துவச் சான்றிதழ் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். பெண் குழந்தை வைத்திருக்கும் குடும்பத்தின் ஆண்டு வருமானம் 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 10 ஆண்டுகளாக விண்ணப்பிக்கும் மாவட்டத்தில் வசித்து இருக்க வேண்டும். பிறப்புச் சான்று, குழந்தையின் தாய் மற்றும் தந்தையின் வயது சான்று, குடும்ப அட்டை, குடும்ப புகைப்படம், திருமண சான்றிதழ், வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்று, குழந்தைகள் பிறப்பு சான்று ஆகியவை முக்கிய ஆவணங்கள் ஆகும்.

Categories

Tech |