திருப்பூரில், மதுபோதையில் அரசு பேருந்து நடத்துநரை தாக்கிய இரு வாலிபர்கள் பொதுமக்களால் அடித்து உதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது .
ஈரோட்டில் இருந்து கிளம்பி ,திருப்பூரை வந்தடைந்த அரசு பேருந்து, பழைய பேருந்து நிலையத்திற்கு வந்தபோது , மதுபோதையில் இரு இளைஞர்கள் பேருந்து முன்பாக நடந்துச் சென்றுள்ளனர்.இதைக் கண்ட பேருந்து நடத்துநர் ராமசாமி அவர்களை நகர்ந்து செல்லும்படி கூறியுள்ளார். இதனால் கோபம் அடைந்த வாலிபர்கள் ,நடத்துநரை தாக்கியுள்ளனர் .
இதனை பார்த்த பொதுமக்கள் மற்றும் மற்ற பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் சேர்ந்து , இளைஞர்களை அடித்து உதைத்தனர்.திருப்பூர் தெற்கு போலீசார் இருவரையும் பிடித்து விசாரணை நடத்திய போது அவர்கள் சிதம்பரத்தை சேர்ந்த ரவி மற்றும் சூர்யா என்பது தெரியவந்தது .