சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாட்லாம்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கிருக்கும் ஏரிக்கரையில் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்தத் தகவலின்படி அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த சந்தோஷ், பெரியகண்ணன் ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 65 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.