சட்ட விரோதமாக மதுபாட்டிகளை விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதிக்கு விரைவாக சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பழம் தோட்டம் கிராமத்தில் வசிக்கும் முத்துவேல் மற்றும் முருகன் ஆகிய 2 பேரும் சட்ட விரோதமாக அரசு மதுபாட்டில்களை விற்பனை செய்த குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.