ஈரோட்டில் வடமாநில இளைஞர்கள் இருவருக்கு கொரோனா அறிகுறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு கண்காணிப்பில் இருக்கின்றார். அதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டடு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தபட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தாய்லாந்தில் இருந்து வந்த இருவருக்கும், நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் என நேற்று மட்டும் கூடுதலாக 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்திருந்த நிலையில் நேற்று இரவு 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பதித்தவர்கள் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே தமிழக அரசு கொரோனா தடுப்பு மற்றும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளைம் அருகே நூற்பாலையில் வேலை பார்த்து வந்த வடமாநில இளைஞர்கள் இருவருக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. இருவருக்கும் காய்ச்சல், இருமல் உள்ளதால் பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்களையும் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.