சென்னை வில்லிவாக்கத்தில் குடிபோதையில் ஒருவர் கார் ஓட்டியதில் விபத்துக்குள்ளாகி இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை வில்லிவாக்கத்தில் குடி போதையில் ஒருவர் கார் ஓட்டியதில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். கார் மோதியதில் மூதாட்டி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மது போதையில் சொகுசு காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபர் தப்பி ஓட முயற்சி செய்தார். அப்போது பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.