காஷ்மீரின் சோபூர் என்ற பகுதியில் ரோந்து சென்றுகொண்டிருந்தபோது பாதுகாப்புப் படையினரை நோக்கி திடீரென பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத்தொடங்கினர்.. யாரும் எதிர்பார்க்காத நேரம் பார்த்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதால், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் இறந்தார். மேலும், 3 பாதுகாப்புப் படை வீரர்கள் பலத்த காயமடைந்தனர்.
இந்த சண்டைக்கு நடுவே, 3 வயது சிறுவன் ஒருவன் தன்னுடைய தாத்தாவுடன் காரில் சென்று கொணடிருந்தார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் அந்த காரும் சிக்கிக் கொண்டதால் அதிலிருந்த முதியவரும் பரிதாபமாக பலியானார்.. இருப்பினும், காரில் இருந்து இறங்கிய அந்த முதியவர், பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தான் கொல்லப்பட்டிருப்பதாக அவரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் இறந்து கிடந்த தனது தாத்தாவின் உடல் மேலே, அந்தச் சிறுவன் அழுதபடியே அமர்ந்து கொண்டிருக்கும் போட்டோ காண்போர் நெஞ்சை பதற வைக்கிறது. நல்ல வேளையாக இந்தத் துப்பாக்கிச் சூட்டில், அச்சிறுவனுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.
அந்த சிறுவனை துப்பாக்கிச் சூட்டிலிருந்து ஜம்மூ காஷ்மீர் போலீசார் பத்திரமாக காப்பாற்றி விட்டதாக காஷ்மீர் மண்டல போலீசார் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
இந்த சாம்பவத்திற்கு முன்னதாக, அனந்த்நாக் நகரில் கடந்த வாரம் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 வயது சிறுவன் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Can you imagine what impact it would have left on the child? and it is the story of every child in Indian Occupied #Kashmir. The event has already taken a beautiful childhood from the kid. Do Kashmiri lives not matter? Are our #children not allowed to have a beautiful childhood? pic.twitter.com/1ZDHIv9jxN
— Mushaal Hussein Mullick (@MushaalMullick) July 1, 2020