ஆஸ்திரேலியாவில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரத்தில் இருந்து மெல்போர்ன் நோக்கி 160 பயணிகளுடன் சென்ற இரயிலானது, வாலன் பகுதியில் வந்தபோது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ரயிலின் 5 பெட்டிகள் முழுமையாக கவிழ்ந்ததில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.