அமெரிக்காவின் டெக்ஸாஸின், சான் ஆன்டோனியா பகுதிலுள்ள அடுக்கு மாடி குடியிருப்பு அருகே நேற்றிரவு எட்டு மணியளவில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டார். இந்த தாக்குதலில் ஒருவர் சம்பவ இடத்திலேயும், மற்றொருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர்.
மேலும் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளதாக டெக்ஸாஸ் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலில் ஈடுபட்ட நபர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும், அவரை பார்த்தவர்களுக்கும் அவரை பற்றிய அடையாளம் சரியாக தெரியவில்லை என்பதும் காவல் துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து ஏதேனும் கூடுதல் தகவல் கிடைக்குமா என்ற கோணத்தில் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இதே பகுதில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.