Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்ற போது நிகழ்ந்த சோகம்… விபத்தில் சிக்கி 2 பேர் மரணம்..!!

கோலியனூர் அருகே நடந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் பகுதியில் நள்ளிரவில் இருசக்கர வானத்தில் வந்த இருவர் விபத்தில் சிக்கி இறந்து விட்டதாக வளவனூர் காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்ற போலீசார், உடல்களை அங்கிருந்து மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், பலியானவர்கள் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் சமுத்திரப் பாளையம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணதேவன் (வயது 35) மற்றும் ரவிக்குமார் (வயது 18) என்பது தெரியவந்தது.

சென்னை சோழிங்கநல்லூரில் தங்கி வேலைபார்த்து வந்த அவர்கள், கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, கோலியனூர் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் ஓன்று மோதியது. இதில் இருவரும் பலியாகியுள்ளனர். விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |