Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பணி நிமித்தமாக சென்ற போது பரிதாபம்… பைக் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து… இருவர் உயிரிழப்பு..!!

பைக் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

ஈரோடு அருகே உள்ள வில்லரசம்பட்டி பிரதான சாலையில் பெருந்துறை நோக்கி சென்ற சரக்கு வாகனம் எதிரே வந்த பைக்கின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கில் வந்த நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து வாகனத்தை சாலையிலேயே நிறுத்திவிட்டு டிரைவர் அங்கிருந்து தப்பிச்சென்றார்..

இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வீரப்பன்சத்திரம் போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

முதல்கட்ட விசாரணையில், விபத்தில் இறந்தவர்கள் திங்களூரைச் சேர்ந்த நல்லசிவம் மற்றும் குணசேகரன் என்பதும் பணி நிமித்தமாக ஈரோடு நோக்கிச் சென்றபோது, இந்த விபத்து நிகழ்ந்ததும் தெரியவந்துள்ளது. இதனிடையே வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார்  தலைமறவாகியுள்ள டிரைவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Categories

Tech |