Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1372ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.தமிழகத்தில் 4 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கையானது 283லிருந்து 365ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த யாரும் உயிரிழக்கவில்லை என்றும் கொரோனாவால் உயிரிழப்போர் விகிதம் 1.1% என்ற நிலையிலேயே உள்ளது என நேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்தார். இந்த நிலையில் கடலூர் மற்றும் ஈரோட்டில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.

கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த 75 வயது முதியவர் உயிரிழந்துள்ளர். ஈரோட்டில் பி.பி.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் உயிரிழந்தார். உயிரிழந்த இருவரின் ரத்த மாதிரி பரிசோதனை முடிவுகள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே சென்னை ஆலந்தூர் காவல்துறை குடியிருப்பில் வசிக்கும் எஸ்.ஐ ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |