வாலிபரை தாக்கி செல்போன் பறித்து சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பகுதியில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் அந்தோனியார் ஆலயத்திற்கு செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென 2 மர்ம நபர்கள் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இதனையடுத்து கோபாலகிருஷ்ணனை சரமாரியாக தாக்கியதோடு, அவரிடம் இருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து விட்டு அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து கோபாலகிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது செல்போன் பறித்து சென்ற நபர்கள் இளவரசன் மற்றும் யுவராஜ் என்பது தெரியவந்துள்ளது. அதன்பிறகு காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.