சட்ட விரோதமாக சாராயம் மற்றும் மது பாட்டில்கள் கடத்திய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வளவனூர் பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பிரகாஷ் வாலிபர் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் பிரகாஷை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த 20 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வைத்து மதுபாட்டில்கள் கடத்திய குற்றத்திற்காக குப்புசாமி என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.