சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள ராம்ஜி நகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் காந்திநகர் பகுதியில் வசிக்கும் ஜெயக்குமார் என்பதும், சட்டவிரோதமாக 1 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக மஞ்சுளா என்ற பெண்ணையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.