Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் பாலியல் தொழில் நடத்திய இருவர் கைது..!!

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பெங்களூரு பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே மண்ணூர்பேட்டையிலுள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் பாலியல் தொழில் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர், அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்த ஒரு வீட்டை சோதனை செய்தனர்.

Image result for arrested

அதில் மருதுராஜ் (35), பிரபாகரன் (35) ஆகிய இருவரும் பெங்களூருவிலிருந்து மூன்று இளம் பெண்களிடம் ஆசை வார்த்தைக் கூறி அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபட வைத்தது தெரியவந்தது. 3 பெண்களையும் மீட்ட காவல் துறையினர் மருதுராஜ், பிரபாகரன் ஆகிய இரண்டு புரோக்கர்களையும் கைது செய்தனர். பின்னர் இருவரையும் புழல் சிறையில் அடைத்த காவல்துறையினர் மூன்று பெண்களையும் பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |