இருசக்கர வாகனத்தில் சாராய பாக்கெட்டுகளை கடத்திய 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள லக்கிநாயக்கன்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்ததில் சாக்கு மூட்டைகளில் அதிகமான சாராய பாக்கெட்டுகள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதனை அடுத்து இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரணை செய்ததில் அவர்கள் கண்ணன் மற்றும் குப்புசாமி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து சாராய பாக்கெட்டுகளை கடத்திய குற்றத்திற்காக இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்த 20 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர்.