காரில் 2 லட்சம் மதிப்புடைய கஞ்சா கடத்தி சென்ற 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செட்டிமண்டபம் பகுதிகளில் கஞ்சா விற்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் பத்தடி பாலம் பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை மறித்து காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர்.
அந்தக் காரில் 2 லட்சம் ரூபாய் மதிப்புடைய 1 1/4 கிலோ கஞ்சாவை கடத்திச் சென்றது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காரில் வந்த செல்வம் மற்றும் அழகப்பன் ஆகிய இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்பின் அவர்கள் பயணம் செய்து வந்த கார் மற்றும் கடத்திச்சென்ற கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.