சாத்தான்குளம் அருகே 7 வயதுடைய சிறுமி காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே அமைந்திருக்கும் வடலிவிளை இந்திராநகரில் வசித்து வரும் சேகர் என்பவரது 7 வயது மகள் இன்று விளையாடச்சென்றார்.. நீண்ட நேரமாகியும் அந்த சிறுமி வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடினர்.. பின்னர் காட்டுப்பகுதியில் சிறுமியின் உடல் தண்ணீர் டிரம்மிற்குள் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின்னரே வன்கொடுமை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக கொல்லப்பட்டாரா என்பது தெரியவரும்.. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.