Categories
சென்னை மாவட்ட செய்திகள்

டெஸ்ட் பண்ண வந்துருக்கோம்… மயங்கி விழுந்த பெண்… நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

காவல் அதிகாரியின் வீட்டில் கொரோனா பரிசோதனை செய்வது போல் நடித்து 2 பேர் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் பகுதியில் இருக்கும் போலீஸ் குடியிருப்பில் தர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆவடி அருகில் இருக்கும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் போலீசாராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சந்திரலேகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மதியழகன் என்ற ஒரு மகன் இருக்கின்றான். இந்நிலையில் சந்திரலேகா தனது மகனுடன் வீட்டில் தனியாக இருக்கும் போது, சுகாதார பணியாளர்கள் போல் கவச உடை மற்றும் முக கவசம் அணிந்து 2 பேர் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இதனையடுத்து அந்த 2 பேரும் சந்திரலேகாவிடம் கொரோனா பரிசோதனை செய்ய வந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை உண்மை என்று நம்பிய சந்திராலேகா கொரோனா பரிசோதனை செய்ய ஒப்புக்கொண்டார். அதன்பின் அந்த 2 மர்ம நபர்களும் பரிசோதனை செய்வது போன்று ஒரு குச்சியை சந்திரலேகாவின் மூக்கில் வைத்தவுடன் அவர் மயங்கி கீழே விழுந்து விட்டார்.

இந்நிலையில் மயக்கம் தெளிந்து சுமார் 10 நிமிடம் கழித்து சந்திரலேகா எழுந்து பார்த்த போது, அந்த 2 மர்ம நபர்களும் பீரோவில் இருந்த 40 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 5 1/2 பவுன் தங்க நகையை திருடி விட்டு தப்பி சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் சந்திரலேகா புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பரிசோதனை செய்வது போல நடித்து காவல் அதிகாரியின் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |