Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அங்க இறக்கி விடுங்க… வாலிபர்களின் மூர்க்கத்தனமாக செயல்… கைது செய்த காவல்துறையினர்…!!

தகராறு ஏற்பட்ட போது கல் வீசி பேருந்தின் கண்ணாடியை உடைத்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தில் ஏறிய 2 வாலிபர்கள் பாலக்கரை பேருந்து நிறுத்தத்தில் இறங்குவதற்காக டிக்கெட் வாங்கியுள்ளனர். ஆனால் அந்த இரண்டு வாலிபர்களும் டிக்கெட் வாங்கிய இடத்தில் இறங்காமல் மேம்பாலத்தில் இறக்கி விடுமாறு தெரிவித்துள்ளனர். இதனால் நடத்துனருக்கும், இரண்டு வாலிபர்களும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதன் பிறகு பேருந்திலிருந்து கீழே இறங்கிய இரண்டு வாலிபர்களும் சாலையில் கிடந்த கல்லை எடுத்து பேருந்தை நோக்கி வீசியதால் அதன் பின் பக்க கண்ணாடி உடைந்து விட்டது. இது குறித்து காவல்நிலையத்தில் பேருந்து நடத்துனர் அறிவானந்தம் என்பவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பேருந்தின் கண்ணாடியை உடைத்த குற்றத்திற்காக முகமது மற்றும் நவாஸ் என்ற இரண்டு வாலிபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |