போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிய குற்றத்திற்காக இரு வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் ரோஷணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் ராஜ் மற்றும் சிவகுமார் என்ற காவலரும் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 25 வயது மதிக்கத்தக்க 3 வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் திண்டிவனம்-செஞ்சி சாலையில் வேகமாக சென்றனர். அந்த மூன்று பேரும் மோட்டார் சைக்கிள் சென்ற வேகத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதனையடுத்து போலீசார் 2 பேரை மடக்கி பிடித்த போது, மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். அச்சமயம் அங்கு நின்ற ஒரு வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வினோதை வெட்டினார்.
இச்சம்பவம் குறித்து உடனடியாக ரோசனை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து கூடுதல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 வாலிபர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அதன்பின் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் அவர்களிடம் விசாரணை நடத்திய போது, அவ்விருவரும் சென்னை பள்ளிக்கரணை பகுதியில் வசித்து வருபவர்கள் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. மேலும் போலீசார் வழக்கு பதிந்து போலீசாரை வெட்டியா குற்றத்திற்காக கைது செய்து விசாரித்து வருகின்றனர்.