சசிகுமாரின் இரண்டு திரைப்படங்களும் ஒரே தேதியில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் சசிகுமார் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் பிரபாகரன் இயக்கத்தில் ”கொம்பு வச்ச சிங்கம்டா” என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து 2 ஆண்டுகளுக்கு மேலாகவே ரிலீசுக்காக காத்திருக்கிறது. இதனையடுத்து, இவர் நடிப்பில் ”ராஜவம்சம்” திரைப்படமும் ரிலீசுக்காக காத்திருக்கிறது.
இந்நிலையில், ”கொம்பு வச்ச சிங்கம்டா” திரைப்படம் நவம்பர் 26 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இவரின் அடுத்த படமான ”ராஜவம்சம்” படமும் அதே தேதியில் வெளியாகும் என அறிவித்திருக்கின்றனர். மேலும், ஒரு நடிகரின் இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாவது தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என திரைத்துரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.