சென்னை அம்பத்தூர் அருகே பாடி சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
சென்னை அம்பத்தூர் பகுதியை அடுத்த பாடி சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 3 பேர் சிக்கியுள்ளனர். பச்சையப்பன் கல்லூரி மாணவர்களான பிரசாந்த், சதீஷ் மற்றும் அவரது நண்பர் விஜய் ஆகியோர் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு பின் சனிக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனர்.
அப்போது பாடி சாலையில் வந்து கொண்டிருந்தபோது வழியில் பஞ்சராகி நின்ற லாரி மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் பிரசாத், விஜய் ஆகியோர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த சதீஷ் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த திருமங்கலம் காவல் துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.