மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட 2 நபர்களின் மரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாங்கரை பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூருவில் தங்கி பெயிண்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சொந்த ஊருக்கு வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து திடீரென கோவிந்தராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி காவல் நிலையத்தில் புகார் வந்ததன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து நல்லாம்பட்டி பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜா சில மாதங்களாக பணிக்கு செல்லாமல் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனையடுத்து தனது வீட்டின் பின்புறம் உள்ள வேப்பமரத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.