கடலூர் மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் பணிபுரியும் பாதிரியார் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக பள்ளியின் ஆசிரியர்கள் இருவர் காவல்துறையில் புகார் அளித்தனர்.
இந்தப் புகார் பற்றி மாணவிகளின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து, அவர்கள் பள்ளியின் முன்பு ஏராளமானோருடன் குவிந்து, பாதிரியாருக்கு ஆதரவாகவும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கோஷமிட்டனர்.
அதில், சிலர் பள்ளிக்குள் புகுந்து புகார் அளித்த இரு ஆசிரியர்களையும் வகுப்பறையில் வைத்துப் பூட்டினர். சம்பவம் குறித்து தகவலறிந்த சேத்தியாதோப்பு துணை காவல் கண்காணிப்பாளர், காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் ஆகியோர் காவல்துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து அங்கு சிறை வைக்கப்பட்டிருந்த ஆசிரியர்களை மீட்டனர்.
அதைப் பிடிக்காத ஆசிரியர்கள், காழ்புணர்ச்சி காரணமாக பாதிரியார் மீது பாலியல் புகார் கூறியுள்ளனர். எனவே இரண்டு ஆசிரியர்களையும் இடமாற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.