Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் நடந்த தாக்குதல்கள்…. இராணுவ வீரர்கள் 8 பேர் பலி…!!!

பாகிஸ்தானில் இரண்டு வெவ்வேறு தீவிரவாத தாக்குதல்களில் ராணுவ வீரர்கள் 8 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தானில் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் இருக்கும் வடக்கு வசீரிஸ்தான் என்னும் பகுதியில் இரண்டு வெவ்வேறு தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப்பிரிவு தெரிவித்திருப்பதாவது, முதல் தீவிரவாத தாக்குதலில் தத்தாகேல் என்னும் நகரில் ராணுவ வாகனத்தின் மீது தீவிரவாதிகள் மறைந்திருந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதில் துப்பாக்கிகளும், ராக்கெட் குண்டுகளும் வீசப்பட்டிருக்கிறது. இதில் பலியான ராணுவ வீரர்களின் உடல்களை ராணுவ தலைமையகத்திற்கு ஹெலிகாப்டரில் கொண்டு சென்றிருக்கிறார்கள். இதே போல இஷாம் பகுதியில் ஊடுருவல் காரர்களுக்கும் ராணுவத்தினருக்குமிடையே நடந்த மோதலில் அஸ்மத்துல்லா கான் எனும் ராணுவ வீரர் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |