ரஜோரி மாவட்ட கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் இருவரை இந்திய ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் கட்டுப்பாட்டு பகுதியில் அத்துமீறி உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதில் இரண்டு பயங்கரவாதிகள் உயிரிழந்த நிலையில், ஒருவர் காயமடைந்தார். இச்சம்பவம் குறித்து ராணுவ அலுவலர் கூறுகையில், ” நவ்ஷெரா பகுதியில் கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகே பயங்கரவாத குழுவினர் ஊடுருவ முயற்சி செய்த போது இந்திய ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில், 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், மற்றொருவர் காயமடைந்துள்ளார். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை” என்று கூறினார். மேலும் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்த முழுப்பகுதியும் சுற்றி வளைக்கப்பட்டு தேடல்கள் நடந்து வருகின்றது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.