Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அந்த தேதியில் தான் வரணும்… டோக்கன் வழங்கும் பணி… மாவட்ட கலெக்டரின் அறிவுரை…!!

பொதுமக்களுக்கு நியாய விலை கடைகளில் 2000 ரூபாய் நிவாரண தொகைக்கான டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காதவாறு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாய விலை கடையில் 2000 ரூபாய் நிவாரணம் முதல் தவணையாக வழங்கப்படுகிறது. இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறும் போது, தொற்று பரவல் காரணமாக குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலை கடைகளில் கூட்டமாக சென்று தொகை பெறகூடாது என்ற நோக்கத்தில் அவர்களுக்கு தேதி, நேரம் குறித்த விவரம் அடங்கிய டோக்கன்களை நியாய விலை கடை விற்பனையாளர்கள் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து கூட்டமாக கூடுவதை தவிர்த்து பயனாளிகளுக்கு வழங்கி உள்ள டோக்கன்களில் குறிப்பிடபட்டுள்ள தேதிகளில் தொகையினை வந்து பெற்றுக் கொள்ளுமாறு நியாய விலை கலெக்டர் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஒரு மீட்டர் சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் வரிசையில் நின்று நிவாரணத் தொகையை பெற்று கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுரை கூறியுள்ளார்.

Categories

Tech |