Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள திரௌபதி அம்மன் கோவில் தெரு பகுதியில் அனிதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இருசக்கர வாகனத்தில் நீப்பத்துறைக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கொட்டக்குளம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் சென்று கொண்டிருந்த போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது.

இதில் பலத்த காயமடைந்த அனிதாவை அருகிலிருந்தவர்கள் உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அனிதா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |