தூத்துக்குடிமாவட்டம் கோவில்பட்டி ஒன்றியத்தில் நடைபெற்ற மறைமுக தேர்தலில் அதிமுகவை விட திமுக அதிகமான கவுன்சிலர் வைத்து இருந்த நிலையிலும் ஒன்றியத் தலைவராக அதிமுகவை தேர்வு செய்தது. இந்த தேர்தலில் முறைகேடாக அதிமுகவை தேர்வு செய்ததாக மக்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் திமுக தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன் தலைமையில் திமுகவினர் நான்குமணி நேரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் போராட்டம் நடைபெற்ற கொண்டிருந்த போது திடீரென்று திமுக தொண்டர்கள் லட்சுமி மற்றும் சரவணன் ஆகிய இருவர் தீக்குளிக்க முயற்சி செய்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதை பார்த்த காவலர்கள் தீக்குளிக்க முயன்ற தொண்டர்கள் இருவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.