Categories
மாநில செய்திகள்

Two Wheeler வைத்திருப்பவர்களுக்கு…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!!

தமிழகத்தில் ஏற்படும் சாலை விபத்துக்களை தடுப்பதற்காக போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது, குறிப்பிட்ட வேகத்தில் செல்லுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. எனினும் வாகன ஓட்டிகளின் அலட்சியத்தால் விபத்துக்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை இயக்ககூடாது எனவும் மீறி ஓட்டும் சிறுவர்களின் பெற்றோர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இருசக்கர வாகனங்களை மாற்றியமைக்கும் நபர்கள் குறித்த விபரங்களை மெக்கானிக்குகள் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |